Latestசினிமா

கணக்கில் தில்லு முல்லு: பதவியிலிருந்து விஷால் விலகல்!

சென்னை, ஏப். 28- அரசு அனுப்பிய நோட்டீசுக்கு குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் பதில் அளிக்காத நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அரசே ஏற்றது. இதன் மூலம் நடிகர் விஷால் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் அனைவரும் பதவியிழந்தனர்.

நடிகர் சங்கத் தலைவராக விஷாலும் அவரது ஆதரவாளர்களும் பதவியேற்ற சமயத்திலிருந்தே, தொடர்ந்து ஊழல் நடப்பதாக கூச்சல்- குழப்பங்கள் எழுந்தன. சுமார் சில மாதத்திற்கு முன் விஷாலுக்கு எதிராகத் திரண்ட சில தயாரிப்பாளர்கள், சங்க அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டனர். அதன் அடிப்படையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் நடிகர் விஷால் தலைமையிலான நிர்வாகத்தினர் முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது.

இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  சங்க  இறுப்பில் இருந்த 7 கோடி ரூபாயை பதிவு செய்யப்பட்ட சங்கங்களின் சட்டவிதிகள் மீறி தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்காக செலவு செய்திருப்பதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு விளக்கம் அளிக்க கோரி பதிவுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அப்புகார் அனுப்பப்பட்டு ஒரு மாத கால அவகாசம் முடிந்த நிலையில் அதிரடியாக தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை அரசே  ஏற்றது. சங்க கணக்குகளை நிர்வகிக்க மாவட்ட பதிவாளர் எம்.சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker