Latestமலேசியா

பிரதமர் பதவியேற்றால் நாட்டை வளப்படுத்துவேன் – அன்வார்

தானா மேரா, ஏப். 28 – பிரதமர் பதவியை ஏற்றால், நாட்டை வளப்படுத்தி ஏழை மக்கள் பலன் பெறும் வகையில் சேவையாற்றப் போவதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாடு தொடர்ந்து மேம்பாடு அடையவும் மற்ற நாடுகள் மலேசியாவை  மதிக்கும் அளவுக்கு உயர்த்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார். மலாய் சமூகமும் இஸ்லாமும் மேன்மை அடையவும் ஊழல் நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.

கிளந்தான் கம்போங் பாடாங் சியாமில் சனிக்கிழமை நடந்த ‘பிச்சாரா பெர்டானா’ எனும் கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, பிரதமர் துன் மகாதீருக்கு நாட்டை நெறிப்படுத்த போதிய வாய்ப்பைத் தரவேண்டுமென்றும் அம்னோவும் பாஸ் கட்சியும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடுதான் இணைந்து செயல்படுவதாகவும் அன்வார் சுட்டிக்காட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker