Latestமலேசியா

பேராவில் பரிவு அட்டை திட்டத்திற்கு ரிம. 2 கோடி 20 லட்சம் ஒதுக்கீடு!

பீடோர் ஏப் 29 – மாநில அரசாங்கத்தின் திட்டமான Kad Perihatin Perak எனப்படும் பேராக் பரிவு அட்டையை பெற 17 ஆயிரம் மக்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இந்த திட்டத்திற்கு ரிம. 2 கோடி 20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமாட் பைசால் அசுமு தெரிவித்தார்.

மாநில சமூகநல துறையால் அடையாளம் காணப்பட்டவர்களுக்கு இந்த பரிவு அட்டை வழங்கப்படுகின்றது.உண்மையாக உதவித் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும் இந்த பரிவு அட்டையின் வாயிலாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மாதம் ஒன்றுக்கு எண்பது ரிங்கிட் வழங்கப்படுவதாக மந்திரி பெசார் சுட்டிக்காட்டினார்.

அதோடு, ஆண்டு ஒன்றுக்கு சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ள முந்நூறு ரிங்கிட் வழங்கப்படுகின்றது.

இதனிடையே, பத்தாங் பாடாங் மாவட்டத்திலில் நடைப்பெற்ற இந்த பேராக் பரிவு அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் மந்திரி பெசாரிடமிருந்து அட்டையை பெற்று கொண்ட செண்டிரியாங்கைச் சேர்ந்த 72 வயது முனியம்மா முனியாண்டி எனும் மூதாட்டி பெந்திரி பெசாருக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
இந்த மாவட்டத்திலிருந்து 882 பேர் இந்த அட்டையைப் பெற தகுதிப்பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் பேசுகையில் இம்மாநிலத்தில் மக்கள் தேவைகள் அறிந்து மக்களின் நலத்திட்டங்கள் படிப்படியாக தொடரும் என்றார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker