Latestமலேசியா

மலேசியாவுக்கு அன்னிய கரன்சி கடத்தல்: விமான நிலையத்தில் நபர் கைது!

திருச்சி, ஏப். 29- திருச்சியிலிருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு வெளிநாட்டு கரன்சியைக் கடத்த முயன்ற நபரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அந்தப் பணம் ‘ஹவாலா’ எனப்படும் சட்ட விரோத பணமாற்று நடவடிக்கைகள் தொடர்பான பணம் எனத் தெரிய வந்தது.

திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு பயணிகள் விமானம் இன்று அதிகாலை புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அனுப்பி கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சியை சேர்ந்த விஜயகுமார் என்ற நபர் மலேசியாவுக்கு சுற்றுலா பயணியாக செல்ல இருந்தார். அவரது உடமைகளை ‘ஸ்கேன்’ மூலம் சோதனை செய்த போது பெட்டிக்குள் ஆடைகளுக்கு இடையே கட்டுக் கட்டாக அமெரிக்க டாலர்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப் பிடித்தனர்.

இதை தொடர்ந்து கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் விஜயகுமாரை கைது செய்து தீவிரமாக விசாரித்தனர். ஐது ஹவாலா பணம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து அந்த டாலர்களை கொடுத்து அனுப்பியது யார் யாருக்கு கொடுக்க இருந்தார் என்பது போன்ற அடிப்படையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker