Latestஉலகம்

முஸ்லிம் பெண்களின் முக அங்கிக்கு இன்று முதல் இலங்கையில் தடை!

கொழும்பு, ஏப். 29 – கடந்த வாரம் 253 பேரைப் பலி கொண்ட குண்டு வெடிப்பிற்குப் பின்னர், முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா எனப்படும் முக அங்கிக்கு இலங்கையில் இன்று முதல் தடை அமலுக்கு வருகிறது.

இதனை அறிவித்த அதிபர் மைத்திரிபால சிரிசேனா, முகத்தை மூடும் எந்தவிதமான முகத் திரைக்கும் தடை விதிக்கப்படுவதாகவும் அந்த உத்தரவு திங்கட்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அறிவித்தார்.

இந்த உத்தரவு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவே என்றும் முகத்தைக் காண முடியாமல் இருக்கும் பாதுகாப்புத்துறையின் சிரமத்தைத் தவிர்க்கவே இத்தடை விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குண்டு வெடிப்பிற்குப் பின்னர், முஸ்லிம்களின் மீது தாக்குதல் நிகழ்த்தாமல் இருப்பதற்காக முஸ்லிம் பெண்கள் முக அங்கியை அணிய வேண்டாமென சமய அறிஞர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

புத்த மதத்தினர் பெருவாரியாக வாழும் அந்நாட்டின் 21 மில்லியன் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 10 விழுக்காட்டினர் உள்ளனர்.

அங்குள்ள முஸ்லிம்கள் மிதவாதமான இஸ்லாமிய நெறிகளைப் பின்பற்றுகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான முஸ்லிம் பெண்களே நிகாப் எனப்படும் முக அங்கிகளை அணிந்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker