Latestமலேசியா

ரோம் சாசன கருத்தரங்கு; விசாரணை நடத்தப்படும்! -ஐஜிபி

பெட்டாலிங் ஜெயா, ஏப். 29 – ஏப்ரல் 27ஆம் தேதி மலாயா பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்த ரோம் சாசனம் சம்பந்தமான கருத்தரங்கைப் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று மலேசிய போலீஸ் படைத்தலைவர் டான்ஶ்ரீ ஃபுஸி ஹருண் தெரிவித்தார்.

அந்த கருத்தரங்கில் சைட் ஹுசேன் என்பவர் ஆட்சியாளர்களைப் பற்றி நிந்தித்து உரையாற்றியதாக தெரிகிறது.

அந்தக் கருத்தரங்கில் சமூக அமைப்புகள், பேட்ரியோட், சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம், ஜி25, அபிம் மற்றும் கெராக் அமைப்பைச் சேர்ந்தோர் கலந்து கொண்டனர்.

அதில் கருத்து வழங்கியோரில் பேராசிரியர் டத்தோ ஷாட் சலீம் ஃபருக்கி, மாணவ ஆர்வலர் அஷீக் அலி சேதி, மற்றும் லிம் வேய் ஜியாட் ஆகியோர் இருந்தனர்.

நிந்தனை வார்த்தைளை எதிர்த்துப் பல புகார்களைப் போலீசார் பெற்றிருப்பதால், அந்தக் கருத்தரங்கு ஏற்பாட்டாளர்கள் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்படும் என போலீஸ் தலைவர் டான்ஶ்ரீ ஃபுஸி ஹருண் தெரிவித்தார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker