Latestஉலகம்

16 வயதில் அந்நிய செலாவணியை ‘கலக்கும்’ இளசு!

லண்டன், ஏப் 29- கிழக்கு லண்டனில் உள்ள மற்ற எல்லா பதின்ம வயது சிறுவர்களை போல் தான் தோற்றமளிக்கிறார் எட்வர்ட் ரிக்கெட்ஸ். 16 வயதில் பள்ளிக்கு செல்லும் போதே தனக்கு தரப்பட்ட கைச்செலவுக்கான அந்த சிறிய தொகையை கொண்டு என்ன செய்தார் என்பது தான் விஷேச செய்தி.

எட்வார்ட் தனது கையில் 150 பவுண்ட் சேமித்து வைத்திருந்தார். ஆனால் அந்த பணத்தை வீடியோ கேம் வாங்குவதற்கோ அல்லது ஆடம்பரமான ஆடைகளை வாங்குவதற்கோ முயற்சிக்காமல் அதை பணப் பரிமாற்ற சந்தையில் முதலீடு செய்ய முடிவெடுத்தார்.

அதில் பிரச்சனை என்னவெனில் எட்வர்ட்டுக்கு அந்நிய செலாவணி சந்தை பற்றி நிறைய தெரியாமல் இருந்தது. எனவே அவர் அதைப் பற்றி யூடியூப் மூலம் படிக்க முடிவெடுத்தார். வீழ்ச்சியில் இருக்கும் போது நாணயங்களை வாங்கி அதன் மதிப்பு உயரும் போது அவற்றை விற்று எப்படி இலாபம் சம்பாதிப்பது என்பதை எட்வர்ட் கற்றார்.தனது முயற்சியில் வெற்றியும் பெற்ற எட்வர்ட், ஒரே வருடத்தில் தன்னிடம் இருந்த 150 பவுண்டை கொண்டு 61,000 பவுண்ட் சம்பாதித்தார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்தது தொடர்பான செய்திகளை தொடர்ந்து படித்த எட்வர்ட், அதன் மூலம் சில ஐரோப்பிய நாணயங்கள் எவ்வாறு உயரும் அல்லது வீழ்ச்சியடையும் என்பதை கணித்தார். தற்போது மிகவும் வெற்றிகரமாய் முன்னேறியுள்ளார்.

தன்னிடம் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் முதலீடு செய்வதற்கான ஆலோசனை கேட்பதற்காக தான் வருகிறார்கள். முதன் முதலில் தான் முதலீடு செய்த தொகையை காட்டிலும் அதிகமாக கொடுக்க தயாராக உள்ளனர் என்கிறார்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker