Latestமலேசியா

22 முறை குப்பை அள்ளும் கட்டையால் தாக்கப்பட்ட மாணவன் !

லாஹட் டத்தோ, ஏப்-29 – படிவம் ஒன்றில் பயிலும் இடைநிலைப்பள்ளி மாணவனை 22 முறை குப்பைத் அள்ளும் கட்டையினால் அடித்த சம்பவம் குறித்து அம்மாணவனின் வகுப்பாசிரியர் மீது புகார்ப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அம்மாணவனின் பின்புறம் மிகவும் கடுமையான காயத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து இப்புகார் செய்யப்பட்டுள்ளது.

13 வயதான அம்மாணவன் நேற்று காலை 9:56 மணியளவில் புகார் செய்ததாக காவல்துறைத் தலைமை அதிகாரியான நாஸ்ரி மான்சோர் தெரிவித்தார். மேலும், அப்புகார் 38 வயது நிரம்பிய பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது கொடுக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

சம்பவத்தன்று காலை 11:30 மணியளவில், திங்கக்கிழமை, அம்மாணவன் பள்ளிக்கு வராத காரணத்தினாலும்; வகுப்பு ஆசிரியருக்குத் தகவல் கொடுக்காததாலும் 22 முறை குப்பை அள்ளும் கட்டையினால் அந்த ஆசிரியர் சக மாணவர்களின் முன்னிலையில் அம்மாணவனை அடித்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக  அவர் சொன்னார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட அம்மாணவன் திங்கக்கிழமையன்று பள்ளிக்கு தாம் செல்லவில்லை; காரணம் அன்று அம்மாணவன் தம்முடைய அப்பாவுடன் தாவாவில் நடந்தத் தற்காப்புக்கலை போட்டி ஒன்றை காணச் சென்றதாகவும் இதனை பற்றி தாம் பள்ளிக்குத் தகவல் சொல்லவில்லை என்பதையும் அவன் ஓப்புக்கொண்டான். தொடந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் வகுப்பிற்கு ரோத்தான்(rotan) கொண்டு வர மறந்ததால்; அம்மாணவனை குப்பை அள்ளும் கட்டையினால் அடித்ததாக அம்மாணவன் விசாரணையில் கூறியுள்ளதாக நாஸ்ரி மான்சோர் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட அம்மாணவன் பின்புறத்தில் ஏற்பட்ட பலத்தக் காயங்களினால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக நாஸ்ரி மான்சோர் குறிப்பிட்டார். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் சம்பந்தப்பட்ட ஆசிரியரை இன்னும் கைது செய்யவில்லை எனவும், விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாஸ்ரி மான்சோர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker