Latestமலேசியா

நாட்டை நலிவிலிருந்து தடுப்பேன் – மகாதீர்

கோலாலம்பூர், ஏப். 30 – நாடு வீழ்ச்சியுற்று, பெருமை இழந்து, அதன் நோக்கத்திலிருந்து விலகுவதிலிருந்து தடுக்கப் போவதாகப் பிரதமர் துன் மகாதீர் முகமட் சூளுரைத்தார்.

மலேசியா பல போராட்டங்களை எதிர்கொண்டு எல்லா சவால்களையும் முறியடித்து வெற்றிப் பாதையில் பீடு நடை போடுவதாகவும் அந்நிலை தமது காலத்திலும் தொடரும் என அவர் உறுதி கூறினார்.

ஆட்சியில் பல்வேறு கட்சிகள், பல்லின தலைவர்கள் பங்கெடுத்துக் கொண்டாலும், தொடக்கத்தில் அதற்கான ஒருமித்த அடித்தளமும் ஒத்துழைக்க வேண்டிய உறுதிப்பாட்டையும் வகுத்துக் கொண்டால் ஆட்சி எந்தச் சிரமமும் இல்லாமல் நடக்கும் என அவர் குறிப்பிட்டார்.

20ஆவது ஆசியான் நிறுவனங்களின் விருதளிப்பு விருந்துபசரிப்பில் சிறப்புரை ஆற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டை நிர்வகிப்பதில் உறுதிப்பாடும் அதனைக் காப்பாற்ற கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். நாடு ஒரு நம்பிக்கைமிக்க நாடாக உருவாக வேண்டுமென்பதே தமது தலையாய நோக்கமாகும் என அவர் சுட்டிக் காட்டினார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker