Latestமலேசியா

பஸ்- லோரி விபத்து: ஓட்டுனர் மரணம்! அறுவர் காயம்!

கோலக்கங்சார், ஏப். 30- வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 231 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பஸ் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஆறு பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.

இந்த விபத்து அதிகாலை 3 .15 மணியளவில் கோலக்கங்சார் அருகே நிகழ்ந்துள்ளது. வடக்கு நோக்கி சென்றுக் கொண்டிருந்த அந்த பயணிகள் பஸ், மற்றொரு லோரியின் பின்புறம் மோதி விபத்துக்கு உள்ளானதாக மாவட்ட போலீஸ் தலைவர் ரசாலி இப்ராஹிம் தெரிவித்தார்.

இது குறித்து போலீசாருக்கு காலை மணி 4.05 மணியளவில் தகவல் கிடைத்ததாக சவர் சொன்னார். இந்தச் சம்பவத்தில் பஸ் ஓட்டுனர் இறந்துள்ள வேளையில் அந்த பஸ்சில் இருந்த அறுவர் காயம் அடைந்து தைப்பிங் மாவட்ட மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய தீயணைப்பு அதிகாரி, தீயணைப்பு நிலையத்திற்கு காலை 3. 15 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும் பஸ் ஓட்டுனர் அந்த விபத்தில் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்தது தெரிய வந்தது என்றும் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker