Latestமலேசியா

மகாதீரின் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை மதியுங்கள்! -அன்வார்

கோலாலம்பூர், ஏப். 30 – நாட்டை வழி நடத்த மக்கள் துன் மகாதீருக்கு அளித்த நம்பிக்கையை மதிக்க வேண்டுமென அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மகாதீர் புதிய அரசை பிரதிநிதிக்கிறார். மக்கள் அவருக்கு அதிகாரம் அளித்திருப்பதை மதிக்க வேண்டுமென பினாங்கில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

மகாதீர் பதவி விலக வேண்டுமென ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அறிவுறுத்தியதை அடுத்து அன்வார் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு விதியின்படி அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவரே நாட்டை வழி நடத்துபவர். அவரின் பணி செம்மையாக நடைபெறுவதை நாம்தான் உறுதி செய்ய வேண்டும்.

எனினும், தற்போதைய அரசை துங்கு இஸ்மாயில் விமர்சனம் செய்வதில் தவறேதும் இல்லையென அன்வார் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker