Latestமலேசியா

மக்களுக்கு விமானத்தில் நீர் வினியோகம்!

மிரி, ஏப். 30 – சரவாக், முலு தேசிய பூங்காவில் குடியிருப்போர் அத்தியாவசிய தேவைக்கு நீர் இன்றி அவதி நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

அவர்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்ய இன்று, செவ்வாய்க்கிழமை காலை சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விமானத்தில் மூலம் அங்கிருப்போருக்கு நீரைக் கொண்டு சென்று விநியோகித்தார்.

மிரி தீயணைப்புத் தலைவர் லாவ் போ கியோங், நூற்றுக் கணக்கான பெட்டிகளில் போத்தல் நீர் அங்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 6.7 டன் நீர் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 12ஆம் தேதி மருடி மாவட்டத்தில் கோடை காலம் உருவானதால் அங்கு நீர் இன்றி மக்கள் அவதிப்பட்டனர். அங்குள்ள 5,000 மக்களுக்கு 8,000 பெட்டி நிறைய நீர் கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker