Latestமலேசியா

வழக்கறிஞர் ஷாபி மீது பாலாவின் மனைவி வழக்கு

கோலாலம்பூர், ஏப். 30 – நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா, பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஸீஸ் அப்துல் ரஹிம் மற்றும் டாக்டர் எஸ். கணேசநாதன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுக்க உயர்நீதிமன்றத்தின் அனுமதியை மறைந்த தனிப்பட்ட துப்பறிவாளர் பிஐ பாலாவின் அனுமதியைப் பெற்றார்.

நஜிப் ரசாக் மற்றும் 6 பேருக்கு எதிராகத் தம்முடைய இழப்பீட்டு வழக்கில் சாட்சியமளிக்கவிருந்த வர்த்தகர் தீபக் ஜெய்கிஷன் என்பவரைத் தடுக்க, அவருக்கான போலி மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்த 3 பேர் மீதும் தனிப்பட்ட துப்பறிவாளர் பிஐ பாலாவின் மனைவி செந்தமிழ்ச் செல்வி கடந்தாண்டு அக்டோபர் 31இல் வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

தீபக்கின் வழக்கறிஞராகச் செயல்பட்ட ஷாபி கெட்ட நோக்கத்தோடு, தீபக் உடல்நலக் குறைவினால் சாட்சியம் அளிக்க வரமுடியாத நிலையில் இருப்பதாக நீதிமன்றத்தில் பொய் சொல்லியிருக்கிறார்.

மார்ச் 19, மார்ச் 27ம் ஏப்ரல் 13 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த வழக்குகளை அதே காரணத்தைச் சொல்லி, அரசு மருத்துவமனை பின்னர் மருத்துவர் கணேசநாதனிடமிருந்து மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களை ஷாபி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இவை யாவும் வர்த்தகர் தீபக்கிற்கு தெரிவிக்காமல், அவர் சாட்சியம் அளிப்பதைத் தவிர்க்கவே ஷாபி, அஸீஸ் மற்றும் டாக்டர் கணேசநாதன் ஆகியோர் சதி செய்ததாக செந்தமிழ்ச் செல்வி குறிப்பிட்டிருந்தார்.

தாம் நஜிப் ரசாக்கின் மீது தொடுத்திருந்த நட்டஈடு வழக்கில் தீபக் சாட்சியம் சொல்வதாக இருந்தது.

மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த தமது கணவர் பாலா இரண்டாவது பிரமாண வாக்குமூலத்தை அளித்த பின்னர், நஜிப்பும் இன்னும் 6 பேரும் சேர்ந்து 2008ஆம் ஆண்டு ஜூலையில் 56 மாதங்கள் தங்களை இந்தியாவில் தங்கிருக்கும்படி செய்திருந்தனர்.

அந்தக் காலக்கட்டத்தில் தாங்கள் சென்னையில் தங்கியிருந்தபோது நேர்ந்த செலவுகள், பள்ளிச் செலவுகள், வருமான இழப்பு, வீட்டு வாடகை, வீட்டுக் கடன், போக்குவரத்துச் செலவு, பொதுவான சேதம் மற்றும் இதர செலவுகளுக்கு நட்ட ஈடாக 8,40,000 ரிங்கிட்டை தங்களுக்கு வழங்க வேண்டுமென செந்தமிழ்ச் செல்வி, பிள்ளைகள் கிஷன், மேனகா மற்றும் ரிஷி ஆகியோர் வழக்கைத் தொடுத்திருந்தனர்.

அவரின் குடும்பம் இந்தியாவிலிருந்து திரும்பிய சில வாரங்களுக்குப் பின்னர், 2013 மார்ச் 15ஆம் தேதி பாலா மாரடைப்பால் மரணமடைந்தார்.

a

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker