Latestமலேசியா

நஜிப் வழக்கு; சேமநிதியின் 400 கோடி ரிங்கிட் எஸ்ஆர்சி கணக்கில் சேர்ப்பா?

கோலாலம்பூர், மே 1 – ஓய்வூதிய நிதியின் 400 கோடி ரிங்கிட் பணம் எஸ்ஆர்சியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக நேற்று நஜிப்பின் எஸ்ஆர்சி நிதி முறைகேடு வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

2011ஆம் ஆண்டு ஆகஸ்டு 29ஆம் தேதி ஓய்வூதிய நிதியிலிருந்து 200 கோடி நிதி எஸ்ஆர்சியின், ஆம் இஸ்லாமில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக அதன் நிர்வாகி வெடனி செனென் தெரிவித்தார்.

அந்தப் பணம் 50 கோடியாக 4 தவணைகளில் செலுத்தப்பட்டது. 2012 மார்ச் 28ஆம் தேதி எஸ் ஆர்சி கணக்கில் மேலு 200 ரிங்கிட் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வங்கியின் நிர்வாகி 50 கோடி ரிங்கிட் மட்டுமே ஒரு முறைக்கு வரவு வைக்க முடியும் என்ற விதிமுறை இருப்பதால் 50 கோடியாக 4 முறை வரவு வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

2012 மார்ச் 28இல் 200 கோடி பணத்தை மூத்த நிர்வாகியின் ஒப்புதலின் பேரில் வங்கியில் வரவு வைக்கப்பட்டது. எஸ்ஆர்சியில் 42 மில்லியன் நிதியை முறைகேடு செய்த வழக்குல் நஜிப் 7 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker