Latestமலேசியா

கெட்ட ஆவிகளை விரட்ட- போமோ கும்பலிடம் பணத்தை இழந்த வர்த்தகர்!

கூச்சிங், மே. 2- ‘போமோ கும்பல்’ என்ற மோசடிக் கும்பலிடம் வர்த்தகர் ஒருவர் 192,000 ரிங்கிட்டை இழந்தார். வர்த்தகரின் வீட்டில் உள்ள கெட்ட ஆவிகளை விரட்டி உதவுவதாக அவரை நம்பவைத்து அந்த பண மோசடி நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடாவானில் இருக்கும் 55 வயதான வர்த்தகரின் வீட்டில் கடந்த 9 ஆண்டுகளாக இருக்கும் கெட்ட ஆவிகளை விரட்ட அவர் சேமித்து வைத்திருக்கும் ரொக்கத்தை தர வேண்டுமென 3 பெண்கள் அவரிடம் பேரம் பேசியுள்ளனர்.

அதே தினத்தின்போது வங்கியிலிருந்த 180,000 ரிங்கிட்டோடு தங்க நகைகளையும் அவர்களிடம் பத்து காவா எம்ஜேசி கார் நிறுத்துமிடத்தில் அவர் ஒப்படைத்துள்ளார்.

அந்த 3 பெண்கள் வர்த்தகர்களிடம் ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, அதில் அவரின் தங்க நகைகளும் ரொக்கமும் இருப்பதாகவும் அதனை ஒரு வாரம் கழித்துத் திறந்து பார்க்கச் சொல்லி இருக்கின்றனர்.

ஒரு வாரம் கழித்து அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்க்கையில் அதில் இரண்டு மினரல் நீர் போத்தல்களும் 4 பாக்கெட் சோயா பானமும் இருந்துள்ளன.

அதோடு, இன்னொரு வழக்கில், ஒரு குடும்பப் பெண் சீன மருந்து விற்பனையாளர் ஒருவரிம் 100,000 ரிங்கிட்டை இழந்துள்ளார். அவரிடம் ஒரு பொட்டலம் கொடுக்கப்பட்டு 52 நாள்களுக்குப் பின்னர் திறந்து பார்க்கும்படி சொன்னதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இது பற்றி குறிப்பிட்ட சரவாக் வர்த்தக குற்றவியல் போலீஸ் தலைவர் முஸ்தாபா கமால் கனி அப்துல்லா, இந்த இரு வழக்குகளும் விசாரணை செய்யப் படுவதாகவும் குற்றவாளிகளுக்கு 10 சிறைத் தண்டனையும் பிரம்படியோடு அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker