Latestஉலகம்

தாய். மன்னர் திருமணம்: மெய்க்காவலரை மணந்தார்!

பேங்காக் மே. 2- தாய்லாந்து மன்னர் மஹா வஜிரா லோங்கோர்ன் நேற்று தமது மெய்க்காவல் படைப்பிரிவின் துணைத்தளபதியாக இருந்த பெண்ணை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார். சுதிரா திட்ஜாய் என்ற அந்தப்பெண் உடனடியாக அரசியாக அறிவிக்கப்பட்ட செய்தி தாய்லாந்து மக்களை வியப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தாய்லாந்தின் 10 ஆவது ராமா என்றழைக்கப்படும் மஹா வஜிரா லோங்கோர்ன் (வயது 66) கடந்த 2016 ஆம் ஆண்டில் தனது தந்தை மன்னர் பூமிபால் அடுல்யாதேஜ் காலமானதைத் தொடர்ந்து புதிய மன்னராக பொறுப்பேற்றார்.

மே 4 ஆம் தேதி சனிக்கிழமை வஜிரா லோங்கோர்ன் அதிகாரப்பூர்வமாக அரியணையில் அமரும் வைபவம் நடக்கவிருக்கும் நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இந்த அரச திருமணம் நடந்துள்ளது.

முன்னாள் தாய் ஏர்வேய்ஸ் விமான நிறுவன பணிப்பெண்ணான சுதிரா, மன்னரின் மெய்க்காவல் படையில் பணி புரிந்து வந்தார். மன்னருக்கும் இவருக்கும் இடையே இரகசிய உறவு இருப்பதாக ஏற்கனவே வெளிநாட்டு பத்திரிகைகள் செய்திகளை கசிய விட்டிருந்தாலும் பெரும்பாலான உள்நாட்டு மக்களுக்கு இது ஆச்சர்யம் தரும் தகவலாகவே அமைந்துள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker