Latestமலேசியா

போலி மருத்துவ விடுமுறை; டாக்டர்கள் லைசென்சு பறிக்கப்படும்!

கோலாலம்பூர்ம, மே.2- போலியான மருத்துவ விடுமுறைச் சான்றிதழ்களை வழங்குவதில் ஈடுபடும் டாக்டர்களின் லைசென்சுகளை மலேசிய மருத்துவக் கழகம் பறித்து விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டாக்டர்கள் மட்டுமே மருத்துவ விடுமுறை அளிக்க முடியும். போலி மருத்துவ விடுமுறை வழங்கும் குற்றங்களில் ஈடுபட்டால் டாக்டர்களின் மருத்துவ லைசென்ஸ் பறிபோகும் என சுகாரதாரத் துறை துணையமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க் கிழமை கோலாலம்பூரில் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையின் போது போலி மருத்துவ விடுமுறைகள் வழங்கி வந்ததாக நம்பப்படும் 6 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது.

இவர்களிடமிருந்து 216 டாக்டர்களுக்கான ஸ்டாம்ப் முத்திரைகளும் 4,631 மருத்து விடுமுறை சீட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர். இந்தக் கும்பல் 2017ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

அதே வேளையில், தங்களின் பெயரைப் பயன்படுத்தி மருத்துவ விடுமுறை சான்றிதழ்கள் வெளியாக்கப் படுவதாக டாக்டர்கள் யாரும் கண்டுபிடித்தால் அது குறித்து அமைச்சிடமும் போலீசாரிடமும் புகார் செய்யும்படி துணையமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker