Latestமலேசியா

‘405’ எதிர்ப்புப் பேரணி நடத்தத் தடையில்லை !

பெட்டாலிங் ஜெயா, மே. 3 – நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்  405 எனும் அமைதிப் பேரணியின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்பாட்டாளர்கள் பூர்த்தி செய்துள்ளதால் அதனை அனுமதிக்கத் தடையில்லை என டாங் வாங்கி துணை ஆணையர் முகமட் ஃபாமி விசுவநாதன் அப்துல்லா தெரிவித்தார்.

அதன் ஏற்பாட்டாளர்கள் அதற்கான விண்ணப்பத்தை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பேரணிக்கான நிபந்தனைகளை அவர்களிடம் விளக்கி இருப்பதாகவும் ஃபாமி விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

அந்தப் பேரணி நாளை பிற்பகல்  2 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மாஸ்ஜிட் ஜாமேக்கிலிருந்து சோகோ  பேரங்காடி வரை நடத்தப்படும். அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

ரோம் சாசனம், ஐசெர்ட் ஒப்பந்தம், சீனப் பள்ளிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்வுச் சான்றிதழ், தீயணைப்பு வீரர் அடிப் முகமட் காசிம் ஆகிய பிரச்சினைகளில் மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் புறக்கணித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்தப் பேரணி நடத்தப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker