Latestமலேசியா

48 மணி நேரத்தில் 4 கடைகளைக் கொள்ளையடித்த பலே கில்லாடித் திருடன் பிடிபட்டான் !

புகிட் மெர்தாஜாம், ஏப் 3- 48 மணி நேரத்தில் நான்கு கடைகளை சமுராய் கத்திகளைக் கொண்டு கொள்ளையடித்த ஆடவனை போலிசார் சுற்றி வளைத்தனர்.

24 மணி நேரம் செயல்படும் கடைகளை குறிவைத்து கொள்ளையிட்ட அந்த 23 வயது ஆடவனை நேற்று மத்திய செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைமையகம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சமுராய் கத்தியோடு கைது செய்தது..

48 மணி நேரத்தில் 4 கடைகளை அவன் கொள்ளையிட்டதாக தங்களுக்கு புகார்கள் பெறப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்த ஆடவன் பிடிபட்டான் என மத்திய செபராங் பெராய் மாவட்ட போலீஸ் ஆணையர் நிக் ரோஸ் அசான் நிக் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.

இதற்கிடையில் முதல் திருட்டு சம்பவம் கடந்த புதன் கிழமை காலை 8 மணியளவில் பட்டர்வொர்த்-கூலிம் எக்ஸ்பிரஸ்வே (BKE) இல் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது. அக்கடையில் அவன் 3 சிகிரெட் பெட்டிகளைக் கேட்டுள்ளான் ஆனால் அதற்கு பணம் தராமல் அங்கிருந்து ஓடிவிட்டான்.

அதனை அடுத்து மற்றொரு திருட்டுச் சம்பவம் வியாழன் அன்று நள்ளிரவு 12.30 மணியளவில் ஜாலான் ஜெலாவட் செபெராங் பிராயில் இருக்கும் ஒரு கடையில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் அந்த ஆடவன் 30 சிகரெட்டு பெட்டிகளை திருடிக்கொண்டு சென்றுள்ளான் என்றும் மேலும் அவன் தன்னுடைய பின்புறத்தில் சமுராய் கத்தியை மறைத்து வைத்திருந்ததை அக்கடையின் ஊழியர் ஒருவர் பார்த்திருக்கின்றார்.
தொடர்ந்து நேற்று விடியற்காலை 1 மனியளவில் தாமான் பாவோவில் உள்ள 24 மணி நேரக் கடையில் 40 பெட்டி சிகிரெட்டுகள் மற்றும் ரொக்கம் ரிம 36-டன் தப்பிச் சென்றுள்ளான். அதே நாளில் தாமான் சாய் லெங்கில் மற்றொரு கடையில் 75 பெட்டி சிகிரெட் மற்றும் ரொக்கம் ரிம 161 கொள்ளையடித்ததும் இவன்தான் என தாங்கள் சந்தேகிப்பதாக நிக் ரோஸ் அசான் தெரிவித்தார்.
அந்த ஆடவன் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker