Latestஉலகம்

மனநலத்திற்கும் நிலவுக்கும் தொடர்பில்லை: சுவிஸ் ஆய்வு

பெர்லின், மே.,4- மனநிலைப் பாதிப்புக்கும் நிலவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக காலம் காலமாக கூறப்பட்டு வருவது சரியானது அல்ல என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது போன்று மனநிலைப் பாதிப்பைக் குறிக்கும் வகையில் “லுனார்டிக்” என்ற வார்த்தைப் பயன்படுத்தப்படுவதையும் பலரும் அறிவர்.

ஆனால், புதிய சுவிஸ் ஆய்வு ஒன்று, மனக் கோளாறுக்கும் நிலவுக்கும் தொடர்ப்பில்லை என்று கண்டறிந்துள்ளது. வால்டர்ஸ் மற்றும் பெவரின் ஆகிய இரு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் பல நிலைகளுக்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களின் நிலைக்கும் தொடர்புள்ளதா? என ஆராயப்பட்டது.

2005 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 18,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் சுவிஸ் மருத்துவ வார இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில் நிலவின் நிலைகளான பௌர்ணமி, அமாவாசை, பிறை நிலவு என எந்த நிலைகளுக்கும் நோயாளிகளுக்கும் எந்த குறிப்பிட்ட தொடர்பும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்களால் கண்டறிய இயலவில்லை.

ஆனால், சில ஆய்வுகள் பௌணர்மி அன்று மட்டும் மருத்துவமனைக்கு வரும் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காட்டின.

அதே போல மற்றொரு ஆய்வில் 91 மனநலம் பாதிக்கப்பட்டோர் பௌர்ணமியன்று ஆழ்ந்த தூக்கம் கொள்ள இயலவில்லை என்று தெரிய வந்தது. இதனால் தான் அவர்கள் மறுநாள் காலையில் மிகவும் களைப்பாக இருந்ததாக அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker