Latestமலேசியா

எங்களை அழிக்க வேண்டுமா? முயன்று பாருங்கள்! – டிஎம்ஜே சவால்

பெட்டாலிங் ஜெயா, மே 5 – எங்களை அழிக்க நினைத்தால் முற்றாக அதனைச் செய்யுங்கள், பாதியிலேயே அதனை விட்டு விட வேண்டாமென  ஜோகூர் இளவரசர் டிஎம்ஜே குறிப்பிட்டுள்ளார்.

ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் (டிஎம்ஜே) தமது டிவிட்டர் அகப்பக்கத்தில் ‘காதிர்’ என்பவருக்காக வெளியிட்ட செய்தியில், அரச  ஆட்சி முறையை அழிக்க நினைத்தால் அதனை 110 விழுக்காடு செய்ய வேண்டுமென்றும், 50 விழுக்காடு மட்டுமே செய்ய வேண்டாமெனவும்  குறிப்பிட்டுள்ளார்.

இளவரசர் டிஜேஎம் குறிப்பிட்ட காதிர் என்பவர், முன்னாள் மூத்த பத்திரிகையாளரும் தற்போது ஊடகம் மற்றும் தொடபுத் துறைக்கான பிரதமரின் சிறப்பு  ஆலோசகருமான காதிர் ஜாசினைத்தான் குறிப்பிடுகிறார் என்று கருதப்படுகிறது.

மேலும், கோலாலம்பூர் மெனாரா இல்ஹாம் எனும் இடத்தில் நீங்கள் கூட்டம் போட்டு எங்களைப் பற்றி பேசுவது தெரியும் என்றும் முதலில் மக்களின் பிரச்சினைகளைத் தீருங்கள் என சுட்டிக்காட்டி உள்ளார்.

டிஎம்ஜே மேலும், காதிர் என்பவர் ஒவ்வொரு நாளும் மெனாரா இல்ஹாமில் அமர்ந்து கொண்டு அவரின் ‘போஸ்’சுடன் உரையாடிக் கொண்டிருப்பதாகவும், இந்த நாடு அவர்களுடையது என நினைக்கின்றனர். இணைய எழுத்தாளர்களின் பின்னால் இருந்து கொண்டு செயல்படும் நீங்கள், கோழைகள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஜோகூர்-சிங்கப்பூருக்கும் இடையிலான ரேப்பிட் போக்குவரத்துத் திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள 4.5 ஹெக்டர் நிலப் பிரச்சினை குறித்த  சர்ச்சை  அடிப்படையில் டிஎம்ஜே மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker