Latestமலேசியா

கோத்தா திங்கி பகுதியில் புயல்: வீடுகளின் கூரைகள் பறந்தன!

கோத்தா திங்கி, மே.5- கோத்தா திங்கி பெல்டா ஆயர் தாவார் 3ஆவது பிரிவு மற்றும் கம்பம் பாரு செலுயூட் ஆகிய இடங்களில் வீசிய கடும் புயலினால் குறைந்தது 87 வீடுகள் கடுமையாக சேதமடைந்தன

ஆலங்கட்டி மழையுடன் அடித்த இந்த கடுமையான புயலினால் பல வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மாநில அரசாங்கம் உடனடியாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் நிதியை ஒதுக்கியது.

மாவட்ட சமூக நலத்துறையினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 300 ரிங்கிட் ரொக்கமும் வழங்கப்பட்டது. புயலினால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்கு மாநில அரசாங்கம் உடனடியாக இந்த நிதியை வழங்கியிருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டோஸ்ரின் ஜார்வந்தி தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker