Latestமலேசியா

பக்காத்தான் அரசு, இஸ்லாத்தைப் புறக்கணிக்கிறதா? -சைபுடின்

குவாந்தான், மே.5- பக்காத்தான் அரசு இஸ்லாத்தைப் புறக்கணிப்பதாகக் கூறப்படுவது தவறு எனபக்காத்தான் செயலக தலைமைச் செயலாளர் டத்தோ சைபுடின் நசுத்தியோன் அப்துல்லா தெரிவித்தார்.

நாட்டில் பெரிய இஸ்லாமிய நிறுவனமான யாத்ரீகர் வாரியத்தை மறு சீரமைத்ததன் வழி பக்காத்தான் பல்வேறு வகைகளில் இஸ்லாத்தை மேன்மைப்படுத்தும் திட்டங்களைச் செயலாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஷாரியா செயல்பாட்டை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல பக்காத்தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஆங்காங்கே உள்ள தவ்ஃபிக் கல்வி நிலையங்களுக்கு நிதியுதவி அளித்து வருவதாகவும் அவர் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

நேற்று, தலைநகரில் இஸ்லாத்தைத் தற்காக்கும் பேரணியில், சமயத்தைப் பக்காத்தான் புறக்கணிப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டைப் பற்றி குறிப்பிட்ட அவர், நாட்டில் சுதந்திரம் இருப்பதால் அவர்கள் பேரணியை நடத்த உரிமை உள்ளதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும், ரோம் சானத்தைத் திரித்து, உண்மைக்கு மாறான தகவலை அளித்த நான்கு கல்விமான்களை ‘கங்கோங் பேராசிரியர்கள்’ என்று கூறுவதில் தவறேதும் இல்லையெனவும் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker