Latestமலேசியா

மலேசியர்களுக்கு வரப்போகிறது வெய்யில் கொடுமை!

கோலாலம்பூர், மே. 5-  தற்போது நாட்டில் அதிகமான மழை பெய்து வரும் நிலை தொடர்ந்து  நீடிக்காது என்றும் கூடிய விரைவில் கடும் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள மக்கள் தயாராக வேண்டுமென வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தென்மேற்கு பருவகாலம் செப்டம்பர் வரை நீடிக்கும்  என்றும் அப்போது வெப்பமான காற்று வெப்பம் மிகுந்த மேகமூட்டட்தை உருவாக்கி மழை பெய்வதைக் குறைக்கும்.

அதன் காரணமாக நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யாத நிலையை உருவாக்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அக்காலக் கட்டத்தில்,  ஜோகூர், மலாக்கா, திரெங்கானு, பகாங் மற்றும் கிளந்தான் போன்ற மாநிலங்களில் வழக்கத்துக்கும் குறைவான மழை பெய்யும். அது 150 எம் எம்.எம். விற்கும் குறைவாக இருக்கும்.

சபா. சண்டாக்கான், கூடாட் மற்றும் கெனிங்காவ் ஆகிய பகுதிகளில் மிகக் குறைந்த அளவே மழை பெய்யும்.

எனினும், 1998 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது போன்ற  எல்-நினோ கோடை காலம் இருக்காது என  வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் டத்தோ அலுய் பாஹார் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker