Latestமலேசியா

இடைநிலைப்பள்ளியில் புகுந்த 7 மீட்டர் மலைப்பாம்பு !

அலோஸ்டார், மே 6- போகொக் செனாவில் உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றின் பொருட்கள் வைக்கும் அறைக்குள்  புகுந்த மலைப்பாம்பினைக் கண்டு காவலர் ஒருவர் அதிர்ச்சியில் உரைந்துப் போனார்.

7 மீட்டர் நீலம் மற்றும் 25 கிலோ கிராம் எடைக் கொண்ட அந்த மலைப்பாம்பைக் பள்ளிக் காவலர் நேற்று இரவு 10.15 மணியளவில் கண்டுள்ளார்.

உடும்பை துரத்திக் கொண்டு வந்த போது அந்த மலைப்பாம்பு பள்ளிப் பொருட்கள் வைக்கும் அறைக்குள் நுலைந்திருக்கலாம் என்று பாடாங் தெராப் மாவட்ட பொது தற்காப்பு படைத் தலைவர் முகமட் சுக்ரி சுய்ப் தெரிவித்தார்.

இதனை அடுத்து இந்த சம்பவத்தை பற்றி புகார் தங்களுக்கு இரவு 10.23 மணியளவில் அந்த பள்ளிக்கூட ஆசிரியர் நாஸ்ரி ஆமாட் (வயது 52) என்பவரால் அளிக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தை அடைந்தவுடன் அந்த மலைப்பாம்பு
பள்ளிப் பொருட்கள் வைக்கும் அறைக்குள் இருந்ததைக் கண்டனர் என்றார் அவர்.

இதற்கிடையில் கோப்ரல் முகமட் ரிசால் அலி தலைமையில் 4 வீரர்கள் அடங்கிய பொது தற்காப்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்து 45 மணி நேர போரட்டத்திற்குப் பின்னர் ஆக்ரோஷமாக இருந்த அந்த மலைப்பாம்பை பிடித்தனர் என்றார் முகமட் சுக்ரி.

இதனை அடுத்து இந்த மலைப்பாம்பு வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker