Latestமலேசியா

இரசாயன வெடிப்பில் 17 மாணவர்கள் காயம் – பினாங்கு இடைநிலைப்பள்ளியில் பரபரப்பு !

பாலிக் புலாவ், மே 6 –   பினாங்கு, பாயான் லெப்பாஸ் பள்ளியில் இரசாயனக் வெடிப்புச் சம்பவத்தில் 17 மாணவர்கள்  காயமடைந்து 70 பேர் இரசாயண வாயுவை நுகர்ந்ததில் சுவாசப் பாதிப்புக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு மாவட்ட போலீஸ் துணை ஆணையர் டிஎஸ்பி மாட் ஸின், பள்ளியில் இராசயன பரிசோதனைக் கூடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் நான்காம் படிவ மாணவர்கள் ஐயோடின் கலவையை சூடாக்கியுள்ளனர், அங்கு சரியான காற்றோட்டம் இல்லாத காரணட்தினால் மாணவர்களுக்கு மூச்சுத் திணரல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

மாணவர்கள் தொடர்ந்து இருமிக் கொண்டிருந்ததால், மருத்துவ  உதவியாளர்கள் அங்கு அனுப்பப்பட்டனர். தற்போது மாணவர்களுக்குப் பிராணவாயு செலுத்தப்பட்டு அவர்களின் நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், பள்ளியில் இரசாயணக் கழிவு ஏற்பட்டதாக கூறியது தவறான தகவல் என்றும் அங்கு இராசயன வெடிப்பு ஏதும் நிகழவில்லை என்பதை போலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker