Latestமலேசியா

நடுரோட்டில் மாதுவை அறைந்த ஆடவர் கைது !

கோலாலம்பூர், மே 6-  ஜாலான் டத்தோ கெரமாட்டில் காரின் சமிக்ஞை விளக்கைப் போடாதக் காரணத்தினால் மாது ஒருவரை கன்னத்தில் அறைந்த மோட்டார்  சைக்கிளோட்டியின் செயலின் காணொளி ஒன்று மே 1 ஆம் திகதி சமூக வலைதளங்களில்  பரவி மக்களிடயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவம் குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் 37 வயதுடைய ஆடவரை போலீசார் தடுத்து வைத்துள்ளனர். மாலை 4 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் அந்த மோட்டாரோட்டி அம்மாதுவின் வாகனத்தை மோதியதால் ஆத்திரமடைந்து அம்மாதுவின் கன்னத்தில் அறைந்திருக்கிறார்.

இச்சம்பவம் குறித்து மறுநாள் காவல் துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் ஆடவர் ஒருவரை இரவு மணி 10-யளவில் கைது செய்துள்ளதாக வாங்சா மாஜு காவல் துறை தலைமை அதிகாரியான நூர் அஸ்மி யுசோஃப் தெரிவித்தார்.

சிறுநீர் சோதனையில் அவ்வாடவர் போதைப்பொருள்  எதுவும் உட்கொள்ளவில்லை  என தெரிய வருகிறது என நூர் அஸ்மி யுசோஃப் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து முறைப்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

சந்தேகத்தின் அடிப்ப்டையில் கைது செய்யப்பட்ட அந்த ஆடவரை கடந்த மே 3 ஆம் திகதியிலிருந்து நாளை வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்படுவார் எனவும் நூர் அஸ்மி தெரிவித்தார்.
இவ்விசாரணைக்கான அனைத்து ஆவணங்களும் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சமர்மிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கடந்த வியாழனன்று, காரின் சமிக்ஞை விளக்கைப் போடாத காரணத்தினால் மாது ஒருவரைக் கன்னத்தில் அறைந்த மோட்டார் சைக்கிளோட்டியின் காணொளி ஒன்று மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகரில் காரொன்றின்  பின்னால் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி, முன்னால் சென்ற காரின் ஓட்டுநரான பெண்,  காரின் சமிக்ஞை விளக்கைப் போடாததால் ஆத்திரமுற்றார்.

தமது மோட்டார்  சைக்கிளை கீழே உதைத்துத் தள்ளிய பின்னர், அந்த மாதுவை நோக்கி கடும் வார்த்தைகளால் ஏசியதோடு,  அவரின் கன்னத்தில்  இரு முறை  அறைந்துள்ளார் என  நூர் அஸ்மி குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker