Latestமலேசியா

பெற்றோர் நன்னடத்தை கோட்பாடு; விரைந்து அமல்படுத்துக! -ஆசிரியர் சங்கம்

கோலாலம்பூர், மே. 6- ஆசிரியர்களின் நலன்கள்பாதுகாக்கப் படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களுக்கான நன்னடத்தை கோட்பாடுகளின் அமலாக்கத்தை விரைவுபடுத்துமாறு அனைத்து பள்ளிகளையும் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் கேட்டுக் கொண்டது.

இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்றே கல்வி அமைச்சு சுற்றறிக்கை அனுப்பி இருந்த போதிலும் நன்னடத்தை கோட்பாடுகளை அமுலாக்கம் செய்வதில் பள்ளிகள் இன்னும் உற்சாகத்துடன் செயல்பட வில்லை என்று ஆசிரியர் பணியாளர் சங்க தலைவர் அமினுடின் தெரிவித்தா.

அனைத்துப் பள்ளிகளும் இந்த நன்னடத்தை கோட்பாடுகளின் அமலாக்கத்தை விரைவுபடுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆசிரியர்களின் விஷயத்தில், விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடப்பதை தடுப்பதற்காகவும் அத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த நன்னடத்தை கோட்பாடுகள் அவசியமாகின்றன.

பினாம்பாங்கில் உள்ள தேசிய இடைநிலைப்பள்ளியில் நன்னடத்தை கோட்பாட்டின் அமலாக்கத்தை தொடக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்துரைத்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் நடப்பிலுள்ள நன்னடத்தை கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு 2017ம் ஆண்டில் இந்த புதிய நன்னடத்தை கோட்பாட்டை மலேசியா வகுத்தது என்று அவர் சொன்னார்.

பெற்றோர்களும் பராமரிப்பாளரிடம் கடைபிடிக்க வேண்டிய 15 வழிகாட்டிகள் இந்த நன்னடத்தை கோட்பாட்டில் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் அவர்கள் தவிர்க்க வேண்டிய நடத்தைகள் எவை என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தங்களின் பிள்ளைகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமானால் முதலில் பள்ளி நிர்வாகத்தின் அனுமதியை பெற்றோர்கள் பெற வேண்டும் என்பதும் இந்த கோட்பாடுகளில் ஒன்றாகும். தலைக்கவசம் அல்லது தடை செய்யப்பட்ட எந்த ஒரு பொருளையும் பெற்றோர்கள் பள்ளிக்கு எடுத்து வரக்கூடாது.

மேலும் பிள்ளைகள் பள்ளிக்கு தவறாமல் வருவதை உறுதி செய்ய வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு என்றும் அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.

இவ்வாண்டு இறுதிக்குள் நாட்டிலுள்ள பத்தாயிரம் பள்ளிகளிலும் இந்த நன்னடத்தை கோட்பாட்டை அமல்படுத்துவதற்கான முயற்சியில் தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது என்று அமினுடின் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker