Latestமலேசியா

வேலையில்லா பட்டதாரிகள் பிரச்னை: விரைவில் களைய அரசு தீவிரம்! -லிம்

கோலாலம்பூர், மே.6- மலேசியர்கள் எதிர்நோக்கி வரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பாதுகாப்பு ஆகியவை தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை களைவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவசியமான பணிகள் ஆரம்பமாகி விட்டன என்று குறிப்பிட்ட அவர், அடுத்த பட்ஜெட்டில் இதற்கான திட்டங்கள் இணைக்கப்படும் என்று சுட்டிக்காட்டினார்.

வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் குறிப்பாக, வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும். முந்தைய காலங்களில் கூட இதுபோன்ற அணுகுமுறையை முன்னாள் அரசாங்கம் மேற்கொண்டதில்லை என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.

“மெகா திட்டங்களைக் காட்டிலும் நான் சாமானிய மலேசியர்களின் பிரச்சினைகளை கவனிக்கவே விரும்புகிறேன் சொல்லப்போனால். 1எம்டிபி விவகாரத்தினால் தாம் மிகவும் சலிப்படைந்து விட்டேன் என்று அவர் சொன்னார்.

இதில், வரும் மே மாதம் 9 ஆம் தேதியோடு பக்காத்தான் அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டு காலம் நிறைவடைவதை முன்னிட்டு, குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு இன்னமும் எதிர்நோக்கியிருக்கும் முக்கிய பிரச்சினைகளில் வேலைவாய்ப்பு பிரச்சனையும் ஒன்றாகும். 2019 ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரத் துறையின் அறிக்கைப் படி ஒட்டு மொத்த வேலையில்லாப் பிரச்சினை கிட்டத்தட்ட 3.3 விழுக்காடு எட்டியிருப்பதாக லிம் குவான் எங் சொன்னார்.

2017 ஆம் ஆண்டின் இறுதியில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 400 ஆக இருந்தது ஆனால் 2018 ஆம் ஆண்டு இறுதியில் அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரம் ஆக அதிகரித்திருக்கிறது என்று மனிதவளத் துறை துணை அமைச்சர் டத்தோ மாப்பூஸ் ஓமார் கடந்த மார்ச் மாதத்தில் தெளிவுபடுத்தி இருந்தார்.

2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இது பற்றி குறிப்பிடப்படவில்லை என்றாலும் வாழ்க்கைச் செலவின உதவிக்காக திருமணம் ஆகாதவர்கள் மற்றும் மீனவர்கள் போன்றவர்களுக்கு கூடுதல் நிதி உதவியை அரசு வழங்கிவருகிறது. குறிப்பாக, அரசாங்கம் செய்த சேமிப்புகளில் இருந்து இந்த நிதி உதவி செய்யப்படுகிறது என்று லிம் குவான் எங் சொன்னார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker