Latestமலேசியா

1எம்டிபியின் பெரும்பகுதி பணம்- ஜோ லோ வசமிருக்கிறது

புத்ரா ஜெயா, மே 6 – 1எம்டிபியின் பெரும் பணத்தை ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் ஜோ லோ எடுத்துக் கொண்டதாகப் பிரதார் துன் மகாதீர் முகமட் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜோ லோவை இன்னும் கண்டுபிடிக்க முடியாத  நிலையில்,  அவரிடம் இருக்கும் பெரும்பாலான பணத்தை மீட்க முடியாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது வரை 200 கோடி மட்டுமே கைப்பற்றப் பட்டுள்ளது. ஆனால், இன்னும் அதிகமான பணம் காணாமல் போயுள்ளது.

எண்ணிப்பார்க்க முடியாத அளவில் ஜோ லோ பணத்தைக் கையாடி இருக்கிறார். மொத்தம் 4,200 கோடியை அவர் கொள்ளையடித்துள்ளார். அதற்கான ஆதாரங்கள் அரசிடம் இருக்கிறது.  அந்தப் பணம் யாரிடம் இருக்கிறது? யார் அதனை வைத்திருக்கிறார்கள்? அந்தப் பணம் எங்கே உள்ளது என அவர் வினவினார்.

அவரை இன்னும் தேடி வருகிறோம் என பக்காத்தான் ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிவடையும் வேளையில் அளித்த பேட்டியில் மகாதீர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1எம்டிபியின் நிதியை மோசடி செய்ததாக ஜோ லோ மலேசியாவிலும் அமெரிக்காவிலும் குற்றசாட்டுகளை எதிர்நோக்கி இருக்கிறார். அவர் 450 கோடி அமெரிக்க டாலரை ஏய்த்ததாக அவர் மீது இரு நாடுகளிலும் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது.அந்தக் குற்றச்சாட்டுகளை ஜோ லோ, தமது பேச்சாளரின் மூலமாக மறுத்து வந்திருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker