Latestமலேசியா

PTPTN கல்விக் கடன்: புதிய வழிமுறை அறிக்கை! மக்களிடம் தரப்படும்! -வான் சைபுல்

சின்டோக், மே 6- பிடிபிடிஎன் எனப்படும் தேசிய உயர்கல்வி கடனுதவி கொள்கை திட்டங்கள் தொடர்பில் பொதுமக்களின் ஆலோசனை மீதான அறிக்கை மற்றும் பிடிபிடிஎன் கடனுதவி திட்டம் தொடர்பான முக்கிய விவரங்கள் ஆகியவை அடங்கிய அறிக்கை இம்மாதத்தில் பொதுமக்களுக்கு வெளியிடப் படவிருக்கிறது.

இந்த ஆவணங்கள் தொடர்பாக நிதி அமைச்சர் லிம் குவான் எங், கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் மற்றும் இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் சைச் சாடிக் ஆகியோர் மறு ஆய்வு செய்து முடித்த பின்னர் இந்த அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்று பிடிபிடிஎன் தலைவர் வான் சைபுல் வான் ஜான் தெரிவித்தார்.

கடந்த டிசம்பரில் இருந்து மார்ச் மாதம் வரை பொது மக்களிடமிருந்தும் நிபுணர்களிடம் இருந்தும் கருத்துக்கள், ஆலோசனைகள் திரட்டப்பட்டு, பரிசீலிக்கப்பட்டுள்ளது. பிடிபிடிஎன் கடனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பது மீதான தகவல்கள் அடங்கிய ஆலோசனை திட்டமாக இந்த அறிக்கை அமைந்திருக்கும் என்று வான் சைபுல் சொன்னார்.

இந்த அறிக்கையை தாக்கல் செய்வதற்கு அனுமதி கோரி கடந்த மாதம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது என்றாலும் உயர்மட்ட அளவில் இதர சில ஆலோசனைகள் பரிசீலிக்க படுவதால் அவை தங்களுக்கு கிடைத்த பின்னர் இந்த அறிக்கை பொதுமக்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது பிடிபிடிஎன் கல்விக்கடன் உதவி பெற்றவர்கள், ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேலாக வருமானம் பெறுவார்களேயானால், அவர்களின் சம்பளத்தில் இருந்து 2 விழுக்காடு ‘பிடித்தம்’ செய்யும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

எனினும், இத்திட்டம் குறித்து பரவலான குறைகூறல்கள் எழுந்ததால் கடந்த டிசம்பர் மாதத்தில் அமைச்சரவை இந்தத் திட்டத்தை ரத்து செய்தது.

இதன் பின்னர் அரசாங்க சார்பற்ற அமைப்புக்கள் பொருளாதார நிபுணர்கள், வங்கித் துறை நிபுணர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருடன் வட்டமேஜை ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

அதிலிருந்து பெறப்பட்ட கருத்துக்களைக் கொண்டு பொதுமக்களின் ஆலோசனை உள்ளடக்கிய ஆவண அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் பல புதிய ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன என்று வான் சைபுல் விளக்கினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker