Latestஉலகம்

இளவரசி மேகனுக்கு ஆண் குழந்தை! உற்சாகத்தில் இளவரசர் ஹர்ரி

லண்டன்,மே.7- பிரிட்டன் இளவரசி மேகன் மெர்க்கலுக்கு ஆண் குழந்தை பிறந்தது என அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இளவரசி மேகன் பிரசவ வலியின் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அதிகாலை 5.26 மணிக்கு 3.2 கிலோ எடையில் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ள இளவரசர் ஹர்ரி எனக்கும், என்னுடைய மனைவிக்கும் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்பதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டார்.

இவ்வேளையில் என் மனைவியை நினைத்து நான் பெருமைப் படுகிறேன் என தெரிவித்தார். குழந்தையின் பாலினம் குறித்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்த ஹர்ரி மற்றும் மேகன் தம்பதியர் தற்போது பெரும் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker