Latestமலேசியா

ஊழல் வழக்கில் தேடப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர்!

கோலாலம்பூர், மே 7 – சபா, தாவாவில் நடந்த ஊழல் வழக்கு சம்பந்தமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தேடப்படுவதாக ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தெரிவித்துள்ளது.

பூஜாங் லாசா மானஜா(வயது 52) என்ற தாயார் மற்றும் அவரின்  4 பிள்ளைகளான நூரி அல்சா மித்தான்யு (வயது 29), நசால் (வயது 26), மூலியானா (வயது 24) மற்றும் கமால் (வயது 19) ஆகியோரே தேடப்படும் ஐவராவர்.

அந்த ஐவரும் சபா, செம்போர்னா,  கம்போங் பாங்காவ் பாங்காவ் எனும் ஒரே முகவரியைக் கொண்டிருப்பதாக எம்ஏசிசி குறிப்பிட்டுள்ளது.

அந்த ஐவரும் ஜூன் 27, 28ஆம் தேதிகளில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெறும் ஊழல் வழக்கில் ஆஜராக வேண்டுமென எம்ஏசிசியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, அவர்களின் இருப்பிடத்தைத் தெரிந்த பொதுமக்கள்,  மூத்த துணை சூப்ரிடெண்டன் சுசீலா சீனோவின் தொலைபேசி எண் 013-8877033 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker