Latestமலேசியா

கால்வாயில் சடலம் – அதிர்ந்த மாது !

கோலாலம்பூர், மே.7, அம்பாங்கில் உள்ள ஜாலான் பூங்கா மெலொர் 5, தாமான் மூடாவின் அருகாமையிலுள்ள பெட்ரோல் நிலையத்தின் கால்வாயில் கடும் தூர்நாற்றம் வீசுயதையடுத்து ஒரு மாது அக்கால்வாயில் என்ன இருக்கும் என எட்டிப் பார்த்த பொழுது ஒரு அழுகிய சடலத்தை கண்டு அதிர்ந்து போனார்.

இச்சம்பவம் குறித்து நேற்று பிற்பகல் 12:48 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்றதாக  அம்பாங் காவல் துறை உதவி தலைவரான முகம்மட் சாயிட் ஹாசான்   கூறினார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், அச்சடலம் ஒரு ஆணுடையது எனவும் கண்டெடுக்கப்பட்ட அச்சடலத்திடம் எந்த ஒரு அடையாள ஆவணமும் கிடைக்காததால் போலீசாரால் அது யாருடையது என்பது கண்டுப் பிடிக்க முடியவில்லை என அவர் கூறினார்.

சடலத்தைத் தடைவியல் நிபுணர்கள் சோதித்துப் பார்க்கையில் அந்த சடலத்தின் மீது எந்த ஒரு காயமும் கண்டுபிடிக்கப்படவில்லை என முகம்மட் சாயிட் தெரிவித்தார்.

மேலும், கண்டுபிடிக்கப்பட்ட அந்த சடலத்தைக் கால்வாயிலிருந்து வெளியே கொண்டு வர பண்டான் இண்டாவின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியை நாடியதாகவும் பின்னர் வெளிகொண்டு வரப்பட்ட அந்த சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக தேசிய பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் தடயவியல் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என முகம்மட் சாயிட் குறிப்பிட்டுள்ளார்.   

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker