Latestமலேசியா

நாட்டின் முன்னாள் காற்பந்து விளையாட்டாளர் அனுவார் காலமானார்!

ஷா ஆலம், மே 7 – நாட்டின் முன்னாள் காற்பந்து விளையாட்டாளர் அனுவார் அபு பாக்கார் நேற்று ஷா ஆலம் மருத்துவமனையில் காலமானதாக சிலாங்கூர் காற்பந்து விளையாட்டு மன்றம்  அறிவித்துள்ளது.

நேற்று இரவு 9 மணிக்கு அனுவார் புற்றுநோயின் காரணமாக மரணமடைந்ததாகவும் அன்னாரின் குடும்பத்தாருக்கு மன்றம் ஆழ்ந்த அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

இவரின் உடல் இன்று, செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மாஸ்ஜிட் சுல்தான் சலாஹுடின் அப்துல் அஸிஸ் ஷா பள்ளிவாசலில் தொழுகைக்குப் பின்னர் ஷா ஆலம் செக்‌ஷன் 21 முஸ்லிம் மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே அனுவாரின் சிகிச்சைக்காக வசூலிக்கப்பட்ட 33,624 ரிங்கிட் அவரின் புதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டதாக எம்பிஎஸ்ஏ தெரிவித்துள்ளது.

அனுவார் 1993 லிருந்து 1997ஆம் ஆண்டு வரை நாட்டைப் பிரதிநிதித்து காற்பந்து விளையாட்டில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் சிலாங்கூர், ஜொகூர், கிளந்தான், பினாங்கு மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் ஆகியவற்றிற்கு விளையாடி இருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker