Latestமலேசியா

நொடியில் மரணம் – உயிர் தப்பித்த ரவிசந்திரன்!

ஜாசின் மே.6, கம்போங் கேசாங் சாலை முச்சந்தியில் லோரியுடன் நடந்த சாலை விபத்தில் 17 வயது பல்கலைகழக மாணவர் ஒருவர் உயிர்தப்பினார்.
இச்சம்பவம் நேற்று காலை மணி 9:30 –யளவில் நடந்ததாகவும் இந்த விபத்தில் ஒரு கனரக லோரியும் ஒரு மோட்டார் சைக்கிளும் சம்பந்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் உயிர் தப்பிய மாணவரின் பெயர் சி.ரவிசந்திரன் என அடையாளம் கூறப்பட்டுள்ளது.

முன் சென்று கொண்டிருந்த அந்த லோரியை முந்தி செல்ல முற்பட்ட பொழுது வேக கட்டுப்பாட்டை இழந்த அம்மாணவனின் மோட்டார் சைக்கிள் முச்சந்தியினுள் நுழைந்து கொண்டிருந்த லோரியின் முன்புறத்தில் மோதியதாக ஜாசின் காவல் துறை தலைமை அதிகாரியான அர்ஷட் அபு தெரிவித்தார்.

காயங்களுக்கு இலக்கான ரவிசந்திரன் ஜாசின் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற அனுப்பி வைக்கப்பட்டதாகவும் 59 வயதுடைய அந்த லோரி ஓட்டுனர் எவ்வித காயமின்றி உயிர் தப்பினார் எனவும் அர்ஷட் அபு கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker