Latestமலேசியா

இசிஆர்எல் திட்டம்: சிக்கனமாக தொடங்கிலும் நட்டமே மிஞ்சும்! -துன் டாயிம்

கோலாலம்பூர், மே 8 – கிழக்குக்கரை  ரயில் திட்டத்தின் (இசிஆர்எல்) செலவினம் கணிசமாகக் குறைக்கப்பட்டாலும், பல ஆண்டுகளுக்கு அது நட்டத்தில்தான் செயல்பட வேண்டியிருக்கும் என துன் டாயிம் ஸைனுடின் குறிப்பிட்டுள்ளார்.

அதன் கட்டுமானச் செலவு 6,560 கோடி ரிங்கிட்டிலிருந்து 4,400 கோடியாகக் குறைக்கப்பட்டு,  2,150 கோடி மிச்சப்படுத்தப் பட்டிருந்தாலும்  அதன் நட்டத்தை அரசு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அத்திட்டத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் கையெழுத்திட்டுள்ளார். அது ஒரு தலைப்பட்சமாக,  சீன குத்தகை நிறுவனத்திற்கு சாதகமாகவும் மலேசியாவுக்குப் பாதகமாகவும் உள்ளது.

அவர்  பதவியில் இல்லாவிட்டாலும் அரசு அதனைத் தொடரும் அம்சம் ஒப்பந்தத்தில் இருக்கிறது. மேலும், அத்திட்டத்தை ரத்து செய்தால் கோடிக் கணக்கான  ரிங்கிட் இழப்பீட்டைத் தர வேண்டும்.

இதில் சீனாவைக் குறை சொல்ல முடியாது. அந்த ஒப்பந்தத்தில் அறிவீனமாகக் கையெழுத்திட்டிருந்தால், அது நம்முடைய   பிரச்சினையென என டாயிம் சுட்டிக்காட்டினார்.

சீன நிறுவனத்தோடு செய்து கொண்ட புதிய ஒப்பந்தத்தைப் பலரும் விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் முந்தைய அரசாங்கம் கையெழுத்திட்டிருந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள அம்சங்களைத் தெரிந்து கொண்டு விமர்சனங்களை முன்வைக்க வேண்டும். அது பற்றிய விமர்சனங்களையும் தங்களின் பரிந்துரைகளையும் எழுத்துப் பூர்வமாக அனுப்பும்படி டாயிம் கேட்டுக் கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker