Latestமலேசியா

கிச்சாப் போட்டல் உயரமே இருந்த இளைஞன் மரணம் !

ஜொகூர் பாரு, மே, 8- பிறக்கும் பொழுதே “கிச்சாப்” போட்டல் அளவில் பிறந்த முகம்மட் லெசாட் முகம்மட் ரொஸ்லி அல்லது செல்லமாக இஜட் என்ற அழக்கப்பட்ட இளைஞன் உடல் நல கோளாறினால் நேற்று இயர்கையை எய்தினார்.
இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய 16-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் இஜாட் என அவரது குடும்பத்தினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிறக்கும் போதே, “எட்வர்ட் குறைப்பாடு” (Sindrom Edward) எனும் நேயினால் பாதிக்கப்பட்டிருந்த இஜாட்டால் நிற்கவோ நடக்கவோ அல்லது பேசவோ முடியாது.
இந்த நோயானது உடலின் உயிரணுக்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கையில் உள்ள குறைபாட்டைனால் ஏற்படுகிறது, இந்நோய் உடல் உறுப்புகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் சில நாட்களில் மட்டுமே உயிர்வாழ முடியும். ஆனால், அதிர்ஷ்ட வசமாக இஜாட் 16 ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சமய பள்ளி ஆசிரியரான இஜாட்டின் தாயார், நேற்று மாலை 6 மணியளவில் நோன்பு திறப்பதற்கான உணவுகளை தயார் படுத்திக் கொண்டிருக்கும் போது, இஜட்டின் வாயிலிருந்து நுரை தள்ளியதையடுத்து இஜட்டை கிளினிக்குக் கொண்டு சென்றதாக அவர் சொன்னார்.

இஜட்டினால் நீண்ட நாள் உயிர் வாழ முடியது என்பதை நாங்கள் அறிந்ததே. இந்த நோயினால் 70 முறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் இஜட்டின் தாய் சொன்னார்.

இஜட்டின் உடல் பாரிட் ராஜாவிலுள்ள இடுகாட்டில் அடைக்கம் செய்யபட்டது என இஜட்டின் தாயார் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker