Latestமலேசியா

நஜிப்-ரோஸ்மாவின் ரிம.68 கோடி நகைகள்: பறிமுதல் செய்ய அரசு மனு

கோலாலம்பூர், மே 8 –  டத்தோஶ்ரீ நஜிப் மற்றும் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரிடமிருந்து கைப்பற்றப்பட்ட விலையுயர்ந்த பொருள்களைப் பறிமுதல் செய்ய அரசு  நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளது.

கடந்தாண்டு நஜிப்பின் அடுக்குமாடி வீடுகள் மற்றும் சொந்த வீட்டிலும் 68 கோடி ரிங்கிட் மதிப்பிலான தங்க நகைகள், விலையுயர்ந்த கைப்பைகள், கைக் கடிகாரங்கள், கண் கண்ணாடிகள் முதலியவை கைப்பற்றப்பட்டன.

மேலும், அந்தச் சோதனை நடவடிக்கைகளில்  3.1 கோடி ரிங்கிட் பெறுமான  27 விலையுயர்ந்த வாகனங்கள், கைக் கடிகாரங்கள் மற்றும் 29 வங்கிக் கணக்குகளும் அடங்கும்.

அந்தப் பொருள்கள் கைபற்றப்பட்டு 12 மாத காலம் மே 16இல் முடிவடைய இருப்பதால், அவற்றைப் பறிமுதல் செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அந்தப் பொருள்களைப் கைப்பற்றிய பின்னர், அதன் மதிப்பு 110 கோடி ரிங்கிட் என அப்போதைய புக்கிட் அமான் புலனாய்வுத் தலைவர் டத்தோஶ்ரீ அமார் சிங் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கூறும்போது, கைப்பற்றப் பட்ட பொருள்களில்  44 கோடி ரிங்கிட் பெறுமான 12,000 தங்க நகைகள் இருந்ததாகவும் அதன் சந்தை விலை 66 கோடியிலிருந்து 88 கோடி ரிங்கிட் வரை இருக்கும் என தெரிவித்திருந்தார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker