Latestமலேசியா

மராத்தோன் வீரர் குகையில் சிக்கிக் கொண்டுள்ளாரா?

கோப்பெங், மே 8- கடந்த 23ஆம் திகதி மார்ச் மாதம் மலை ஏறும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருக்கும் போது காணாமல் போனதாக நம்பப்படும் முகமட் அஸ்ராவ் ஹாசான் (வயது 29) என்ற மராத்தோன் வீரரின் நிலை பலரின் கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது.

இதற்கிடையில், நேற்று அந்த மராத்தோன் வீரரின் பிம்பம் ஒரு குகைக்குள் தெரிவதாகவும், அவர் அங்கிருந்து வெளிவர இயலாத நிலையில் இருப்பதாக மராத்தோன் வீரரை தேடும் பணியில் ஈடுப்பட்டிக்கும் தேடல் மற்று மீட்பு படையினர் கூறியிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இத்தகவல் உண்மையா என்பதை போலிசார் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், “இது நிஜமாக இருந்தால் எனது தம்பி விரைவில் எங்களிடம் திரும்பி வருவார் என்று அவர்கள் நம்பிக்கையாக உள்ளது” என ஆச்சாப்பின் அண்ணன் நேற்று அவரது வளைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker