Latestமலேசியா

வாங் கிளியான் மனித புதைகுழி; எல்லையில் கண்டுபிடித்தது எப்படி? -அருள்தாஸ்

புத்ரா ஜெயா, மே 8 – தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் நுழைவது மிகவும் சுலபமானது என வாங் கிளியான் மனிதபுதைகுழி சம்பந்தமான அரச விசாரணை ஆணையத்தின் போது சாட்சியமளித்த மலாய் மெயில் செய்தியாளரான அருள்தாஸ் சின்னப்பன் சொன்னார்.

தாம் 2015 மே 13 ஆம் தேதி தாய்லாந்திலிருந்து மலையில் ஏறி அங்கிருந்து கீழே இறங்கி, அங்கு அமைந்திருந்த சவக்குழிகளைப் பார்த்ததாக அந்த விசாரணையில் அவர் சாட்சியமளித்தார்.

மலேசியாவின் எல்லையோரம் இருக்கும் வாங் கிளியான் வழியாகச் செல்ல 5 அல்லது 6 முறை முயன்றதாகவும் ஆனால், அப்பகுதியில் மலை செங்குத்தாகவும் அபாயம் நிறைந்ததாகவும் இருந்ததால், தாம் தாய்லாந்து வழியாக அந்தப் புதைகுழிகள் இருந்த பகுதிக்குச் சென்றதாகத் தெரிவித்தார்.

தாய்லாந்துக்காரர்கள் இருவரோடு தாம் மலேசியா எல்லைக்கு வந்ததாகவும், அங்கு எந்தவிதமான தடுப்புச் சுவரோ அல்லது வேலியோ இல்லை. ஆனால், எல்லைக் கல் மட்டுமே இருந்தது என்றார் அவர்.

அதைத் தாண்டி, மலை மீது சுமார் இரண்டு மணி நேரம் ஏறி, கீழே பார்த்ததில், மியன்மார் அகதிகளைத் தடுத்து வைத்திருந்த, பழைய ஆள் கடத்தல்  முகாமைக் கண்டதாக அவர் தெரிவித்தார்.

அதன் பின்னர், அதற்கு அருகில் தாம் 15 புதை குழிகளைக் கண்டதாக அருள்தாஸ் தெரிவித்தார். அந்த புதைகுழிகள் ஏற்படுத்தப்பட்டு சிறிது காலம் ஆகியிருந்தது என்பதால் அதன் மீது செடி கொடிகள் படர்ந்திருந்ததாக குறிப்பிட்டார்.

இரவு நேரம் நெருங்கி வந்ததால், தாங்கள் அந்த இடத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே இருந்ததாக அவர் சொன்னார்.

இந்த அரச விசாரணையை முன்னாள் தலைமை நீதிபதி அரிஃபின் ஸக்காரியா தலைமையில் நோரியான் மாய், நோர்பாஹ்ரி பஹாருடின், ரசாலி இஸ்மாயில், ஜுனாய்டா அப்துல் ரஹ்மான், நஸிரா ஹுசேயின் மற்றும் டான் செங் கியாவ், யுஸ்ரான் ஷா யூசோப் ஆகியோர் நடத்துகின்றனர்.

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker