Latestமலேசியா

உலு சிலாங்கூரில், அரசு கிளினிக்கில் ஆவிகள் அட்டகாசம் தாங்கமுடியலே!

ஷா ஆலம், மே 9 – உலு சிலாங்கூர், டேசா கெசிர் தெங்காவில் உள்ள கிராமப்புற அரசு கிளினில் ஆவிகள் உலவுவதாகவும் அதன் அட்டகாசம் தாங்க முடியாமல் அந்தக் கிளினிக் தற்காலிகமாக  மூடப்பட்டுள்ளடதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

அந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார மேம்பாட்டுப் பிரிவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் காலிட் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், அந்த கிளினிக்கில் ஆவிகளின் நடமாட்டம் இருப்பதால் அது தற்காலிகமாக மூடப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டுள்ளது.

அந்தக் கிளினிக்கில்  பகல் நேரத்திலும் நுண்ணிய ஆவிகளின் நடமாட்டம் இருப்பதை உணர்ந்த தாதி ஒருவர்,  அங்கு வேலை செய்ய அச்சப் படுவதாகவும் செய்திகள் உலா வந்துள்ளன.

அந்தக் கிளினிக்கை தற்காலிகமாக மூடும் அறிக்கையும் ஊடகங்களில் வெளியிடப் பட்டுள்ளது.  பொதுமக்கள் தொர்ந்து சுகாதார சேவையைப் பெற,  5 கிலோ  மீட்டர்  தூரத்தில் உள்ள சுங்கை செலிசிக் சுகாதார கிளினிக்கிற்குச் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker