Latestமலேசியா

கம்பார் தமிழ்ப்பள்ளிக்கு நில உரிமம் சான்றிதழ் வழங்கப்பட்டது!

கம்பார் மே. 9 – இங்குள்ள கம்பார் தமிழ்ப்பள்ளிக்கு நில உரிமம் சான்றிதழை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் ஒப்படைத்தார். கடந்த 60 ஆண்டு காலமாக இங்கு செயல்பட்டு வரும் இப்பள்ளிக்கூடம் நில உரிமம் இன்றி செயல்பட்டு வந்துள்ளது.

இந்த விவகாரத்தை கடந்த ஆறு மாதங்களுக்குப் முன்பு மாநில ஆட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதையொட்டி மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமாட் பைசால் இந்த உரிமத்தை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று கம்பார் பள்ளிக்கு வருகை புரிந்த சிவநேசன் , அதனை பள்ளியின்  பொறுப்பாசிரியர்களிடம் ஒப்படைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இம்மாநிலத்தில் செயல்படும் 135 தமிழ்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தொடர்ந்து மாநில அரசாங்கம் அதன் சேவையை வழங்கிடும் என்றார். இம்மாநிலத்தில்  48 தமிழ்ப்பள்ளிகள் முழு உதவிப் பெற்றப் பள்ளிகள் உள்ளன. மேலும் பேரா மாநிலத்தில் பல தமிழ்ப்பள்ளிகள் தனியார் நிலங்களில் உள்ளன. எதிர்காலத்தில் அவைகள் எந்தவித சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்வதிலிருந்து தவிர்க்க கவனமுடன் பள்ளி நிர்வாகம் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker