Latestவிளையாட்டு

சாம்பியன்ஸ் லீக்: இறுதி ஆட்டத்தில் டோட்டன்ஹாம் – லிவர்புல் மோதல்!

லண்டன், மே.9- ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது கட்ட அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் டோட்டன்ஹாம் குழு ஹாலந்தின் அயாக்ஸ் குழுவை வென்று இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்றது.

முதல் கட்ட அரை இறுதி ஆட்டத்தின் போது 1 -0 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த டோட்டன்ஹாம் குழு, நேற்று நடந்த இரண்டாம் கட்டப் போட்டியின் போது முற்பகுதி ஆட்டத்திலேயே மேலும் இரண்டு கோல்களை வாங்கி, பின்னடைவுக்கு உள்ளானது.

மொத்தத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் பின்னடைவை கண்டிருந்த நிலையில் அதிலிருந்து மீள முடியாது என்கிற சூழல் நிலவிய நேரத்தில், பிற்பகுதி ஆட்டத்தில் தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் டோட்டன்ஹாம் மூன்று கோல்களை தொடர்ச்சியாக அடித்து 3- 3 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை சமன் படுத்தியது.

அயாக்ஸ் குழு 3-0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது என்றாலும் பிற்பகுதியில் டோட்டன்ஹாம் ஆட்டக்காரர் லுகாஸ் மவ்ரா தொடர்ச்சியாக மூன்று கோல்களை அடித்தார்.

ஆட்ட முடிய சில வினாடிகளே இருந்த நிலையில் அவர் தனது மூன்றாவது போல அடித்தது டோட்டன்ஹாம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது.

மேலும் எதிரியின் அரங்கில் கூடுதல் கோல்களை அடித்ததன் அடிப்படையில் டோட்டன்ஹாம் சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது. மிகப்பெரிய வீழ்ச்சியிலிருந்து எழுச்சி கண்டு வெற்றியை நிலைநாட்டிய டோட்டன்ஹாம் குழுவின் வீரர்களும் அதன் நிர்வாகியும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர்.

அடுத்து நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் இரண்டு இங்கிலாந்து குழுக்கள் பலப்பரீட்சையில் இறங்கவிருக்கின்றன. ஏற்கனவே பார்சிலோனா குழுவை 4-3 என்ற கோல் விகிதத்தில் வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்றிருக்கும் லிவர்புல் குழுவுடன் டோட்டன்ஹாம் குழு மோதுகிறது.

இம்முறை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு இங்கிலாந்திலிருந்து இரு குழுக்கள் தேர்வு பெற்றிருப்பது அந்நாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது. டோட்டன்ஹாம் ரசிகர்கள் மிகுந்த உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker