Latestஉலகம்

சிங்கை விமானம் புதுடில்லியில் அவசர தரையிறக்கம்!

சிங்கப்பூர், மே.9- சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு (சியா) சொந்தமான ஏர்பஸ் 380 பயணிகள் விமானம் அதன் மூக்கு பகுதியில் உள்ள சக்கரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக புதுடில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தில் 203 பயணிகளும் 25 ஊழியர்களும் அப்போது இருந்தனர். இந்த விமானம் நேற்று இரவு 8 20 மணி அளவில் அதாவது திட்டமிடப்பட்டதைக் காட்டிலும் அரை மணி நேரம் தாமதமாக புதுடில்லியில் தரையிறக்கப்பட்டது.

பரிசோதனை செய்து பார்த்தபோது அதன் மூக்குப் பகுதியில் உள்ள சக்கரத்தின் ஹைட்ராலிக்கில் கசிவு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது சரி செய்யப்பட்டது.

விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டதால் விமான நிலையத்தில் அனைத்து அவசர ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழலே எழவில்லை என்று விமான நிறுவன பேச்சாளர் தெரிவித்தார்.

 

 

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker