Latestமலேசியா

தண்ணீர் ஒப்பந்தம்: சிங்கப்பூர் இழுத்தடிக்கும்! -துன் டாய்ம்

கோலாலம்பூர், மே. 9- மலேசியாவுடனான தண்ணீர் ஒப்பந்தத் தகறாரை சிங்கப்பூர் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டே கொண்டே போகும். தண்ணீர் தேவை விவகாரத்தில் சுய நிறைவை அடையும் வரையில் இந்த சர்ச்சையைன் நீடிக்கும் என்று முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் தெரிவித்தார்.

1962 ஆம் ஆண்டில் மலேசியாவுடன் செய்து கொள்ளப்பட்ட தண்ணீர் உடன்படிக்கையில் திருத்தம் செய்வதற்கு ஒப்புக்கொள்ளாமல் கால தாமதப்படுத்தும் தந்திரத்தை சிங்கப்பூர் கையாளும் என்று அவர் சொன்னார்.

இந்த தண்ணீர் ஒப்பந்தம் 2061 ஆம் ஆண்டில்தான் முடிவுக்கு வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 2061 ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் தண்ணீர் தேவையில் சுய நிறைவை அடைந்து விடும்.

அப்போது மலேசியாவிடமிருந்து சுத்திகரிக்கப்படாத தண்ணீரை வாங்க வேண்டிய அவசியம் சிங்கப்பூருக்கு இருக்காது என்று துன் டாய்ம் சுட்டிக்காட்டினார்.

எனவே, அந்தக் காலகட்டம் வரையில் இந்தப் பிரச்சினையை இழுத்தடிப்பதற்கு சிங்கப்பூர் முயன்று கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்தக் காலக் கட்டத்தை எட்டி விட்ட பின்னர் எத்தகைய இழப்பீடும் இல்லாமல் அந்த உடன்பாட்டை அது கிழித்து எறிய முடியும் என்று அவர்சொன்னார்.

மேலும் அண்மையில் இந்த உடன்பாடு தொடர்பான திருத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சிங்கப்பூர் முன்வந்து இருப்பதையும்டாய்ம் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதம் இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான ஒரு தீர்வைக் காண இரு நாடுகளும் முயல வேண்டும் இன்று ஒப்புக் கொள்ளப்பட்டு இருப்பதாக துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார் எனப்து குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker