Latestமலேசியா

பெம்பான் நிலத்திட்டம்; அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் ! மக்கள் கோரிக்கை

ஈப்போ மே. 9 – புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவர்களுக்காக அரசாங்கம்  ஒதுக்கீடு செய்த பெம்பான் நிலத்திட்டத்தில் தங்களை குடியேற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள்ள குரல் எழுப்பியுள்ளனர்.

தேசிய முன்னணி ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பெம்பான் நிலத்திட்டத்தில் புந்தோங்கில் முன்பு புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த 586 குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த நிலத்தை சீர் செய்யவும் அதில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ  நஜீப் வெ. 50 லட்சம் வழங்கினார். திட்டமிட்டபடி அதன் பணிகள் நிறைவு பெற்றது. அதில் தொடக்கக் கட்டமாக 133 குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் இது வரை அங்கு யாரும் குடியேற்றப்படவில்லை . இதற்கிடையில் பெம்பான் நிலத்திட்டத்தை அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளிவரத் தொடங்கியது. அதில் அடுக்குமாடி வீடு கட்டப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இதற்கிடையில் 133 குடும்பங்களை நேர்முக பேட்டிக்கு பத்துகாஜா மாவட்ட அலுவலகம் அழைத்துள்ளது. அதன் தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஈப்போ பாராட்  தொகுதி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வில் அனைவரும் , அரசாங்கம் முன்பு அறிவித்ததுபோல் நிலம் வழங்கவேண்டும், அடுக்குமாடி குடியிருப்பு தேவையில்லை என்று கோரிக்கையை முன் வைத்தனர் .

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker