Latestஉலகம்

ராடாரிலிருந்து காணாமல் போன விமானம் பத்திரமாக தரையிறங்கியது !

பிரான்ஸ், மே 9- பேரிஸ்லிருந்து மும்பாய் சென்றுக் கொண்டிருந்த பிரான்ஸ் ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று ராடாரிலிருந்து காணாமல் போனதாக தகவல் ஒன்று வெளியானது.

AF218 எனப்படும் அந்த விமானம் ராடாரிலிருந்து காணாமல் போனதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்று பிரான்ஸ் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்தது.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட அந்த விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது என்று விமான ராடார் 24 தனது டுவிட்டர் அகப்பக்கத்தின் வழி உறுதிப்படுத்தியது.

நேற்று தனது பயணத்தின் போது AF218  விமானத்தின் விமானி ‘7700 squawk’  அவசர சமிஞ்யை அனுப்பியதாகவும் அதன் பிறகு அந்த விமானம் ராடாரில் இருந்துக் காணால் போனதாகவும் விமான ராடார் 24 குறிப்பிட்டது.

காலை 11.21 மணியளவில் தனது பயணத்தை பேரிஸ்லிருந்து ஆரம்பித்து நள்ளிரவு மும்பாயைச் சென்று அடையவிருந்த அந்த விமானம், விமானத்தின் பொறியியல் கோளாரால் திசைமாறிச் சென்று ஈரான் இஸ்ஃபான் விமான நிலையத்தில் தரை இறங்கியது என்று ஏர் பிரான்ஸ் தனது அறிக்கையில் வெளியிட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker