Latestஉலகம்

13 ஆம் தேதி கொழும்பில் குண்டு வெடிக்குமா? -பொன்சேகா எச்சரிக்கை

கொழும்பு,மே.9- இலங்கையின் முக்கிய இடங்களில்எதிர்வரும் 13ஆம் தேதி குண்டு வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் இதுகுறித்து தகவல்கள்  கிடைத்து இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் மேலும் கூறியதாவது: இதுவரை150 தீவிரவாதிகளின் தீவிரவாதிகளில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிபர் மைத்திரி தெரிவித்துள்ளார்.
அப்படியாக இருந்தால் இன்னும் நூறு பேர் கைது செய்யப்பட வேண்டி இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று உளவுத்துறை பலம் பலவீனம் அடைந்து இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சிலர் விமர்சித்து உள்ளனர்.

உளவுத்துறையில் சிலர் நீக்கப்படுவதன் மூலம் உளவுத்துறை பலவீனம் அடையவில்லை. மாறாக உளவுத்துறையை தொழில்நுட்ப ரீதியில் பலப்படுத்தவில்லை.

இந்நிலையில் வெள்ளவத்தை , பஞ்சிகாவத்தை,கொழும்பு கோட்டை ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் எதிர்வரும் 13ஆம் தேதி குண்டு வெடிக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே வேளை மேற்குறிப்பிட்ட 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்து சுற்றுலாத்துறை எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு வெளியிட்டது. இவ்வாறு பொன் சேக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker