Latestஇந்தியா

சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்!

நெல்லை,மே.10-கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டினத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் (வயது74 ) காலமானார்.

இவர் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் வசித்து வந்தார்.
இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார்.

சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997 இல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். இந்நிலையில்  எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவரது உயிர் இன்று காலையில் பிரிந்தது. அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker